#ModiSpeaksToNews18 : சீன பொருட்களை புறக்கணிக்க முடியுமா? - பிரதமர் மோடி பதில்

இது உலகமயமாக்கலின் காலம். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்

#ModiSpeaksToNews18 : சீன பொருட்களை புறக்கணிக்க முடியுமா? - பிரதமர் மோடி பதில்
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: April 10, 2019, 11:54 AM IST
  • Share this:
சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற முழக்கம் எழுவதை தொடர்ந்து அதற்கு பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டியில், புல்வாமா தாக்குதல், மக்களவை தேர்தல், காஷ்மீர் பிரச்னை, ரஃபேல் விவகாரம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், நம்பி நாராயணன், சக்ஜுதா எக்ஸ்பிரஸ், ரெயில் குண்டு வெடிப்பு ஆகிய பல விவகாரங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

சீன பொருட்களை புறக்கணிப்போம், சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்ற முழக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி, ‘உலகம் தற்போது இருமுனையாக இல்லை. இது உலகமயமாக்கலின் காலம். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இங்கு சர்வதேச சட்டங்கள் உள்ளன. நாம் அனைவரும் உலக வர்த்தக மையத்தில் கையெழுத்திட்டுள்ளோம். ஒரு அரசு என்ற முறையில் நமது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணைந்து உள்ளது, சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. நாம், ஊடகத்தினர் உட்பட அனைவரும் மக்களை வழிநடத்த வேண்டும் ’என்று பதில் அளித்துள்ளார் .


First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்