'சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியாமல் சுற்றுவது கவலை அளிக்கிறது' - வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி

சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியலாமலும், சமூக இடைவெளி இன்றி சுற்றி திரிவதும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்

 • Share this:
  வட கிழக்கு மாநிலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிவது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரேனா பரவல் 10 சதவிகிதத்திற்கும் அதிகமுள்ள 73 மாவட்டங்களில் 47 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. இதனையடுத்து மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

  காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணியலாமலும், சமூக இடைவெளி இன்றி சுற்றி திரிவதும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.மருத்துவ நிபுணர்கள் கூட்டம் கூடுவதற்கு எதிராக தொடர்ந்து எச்சரிக்கை விடுப்பதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் வந்துவிட்டு தானாக சென்று விடாது என எச்சரித்தார்.கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

  Also Read |  காங்கிரஸில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்? ராகுல் காந்தியுடனான சந்திப்பின் பின்னணி என்ன?

  கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அங்கு திங்கள் கிழமையன்று 7,798 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா தொற்று பரவும் சதவீதம் 9 -ஆக குறைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இதனிடையே இந்தியாவில் 118 நாட்களில் இல்லாத அளவிற்கு, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

  Also Read |  ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு

  சிகிச்சைக்குப் பிறகு, 49,007 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 4.31 லட்சமாக குறைந்துள்ளது. சிகிச்சை பலனின்றி கொரோனாவால் மேலும், 539 பேர் உயிரிழந்தனர்.

  அதேசமயம், ஏற்கெனவே பலியான 1,481 பேர், கொரோனாவால் உயிரிழந்ததாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 14 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: