Home » News » National » PM NARENDRA MODI SAYS INDIAS PHARMA INDUSTRY AN ASSET FOR THE ENTIRE WORLD VIN

இந்திய மருந்தக துறை உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது - பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய மருந்தக துறை உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது - பிரதமர் மோடி
அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
  • Share this:
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான, 2020 இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான வலுவான போரை இந்தியா நடத்தி வருவதாக மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் மருந்தகத் துறை, உற்பத்தி உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இதன்மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் மருத்துவச் செலவுகளை இந்தியா குறைத்துள்ளதாகவும் கூறினார்.

Also read... இந்தியாவில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்


கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். எத்தகைய சோதனையாக இருந்தாலும், இயற்கையாகவே இந்தியர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், உலகில் உள்ள பெருநிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading