4 நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர்
மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்டது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா சபை பொதுக்கூட்டம் மற்றும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 22 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். தனது சுற்றுப் பயணத்தில் 65 மணி நேரத்தில் 24 சந்திப்புகளை மேற்கொண்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும், பெரு நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்த மோடி, இன்று நாடு திரும்பினார்.
இதையும் படிங்க: நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் படிக்க: இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது குலாப் புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை
நிகழ்ச்சியின் போது பேசிய ஜே.பி. நட்டா, உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை பிரதமர் மாற்றியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் மோடியின் தலைமையிலான இந்தியாவை உலகம் மாறுபட்ட வகையில் பார்ப்பதை பிரதமரின் இந்த சுற்றுப்பயணம் நிரூபித்திருப்பதாகக் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.