Home /News /national /

370-வது பிரிவை நீக்கியதால் காஷ்மீரை நாம் இழந்துவிட்டோமா? பிரதமர் கேள்வி!

370-வது பிரிவை நீக்கியதால் காஷ்மீரை நாம் இழந்துவிட்டோமா? பிரதமர் கேள்வி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மகாராஷ்ட்ரா மாநிலம், பார்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை நீக்கியதால், காஷ்மீரை நாம் இழந்துவிட்டோமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மகாராஷ்ட்ரா மாநிலம், பார்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது நாட்டு நலனுக்காகவே 370-வது பிரிவு நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ஒருவர் 370-வது பிரிவை நீக்கினால் நாடே அழிந்து விடும் என்றும், காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது அதை நாம் இழந்து விடுவோம் என்றும் கூறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு அழிந்து விட்டதா என்றும், காஷ்மீரை நாம் இழந்து விட்டோமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நாட்டின் ஒற்றுமை குறித்த விவகாரங்களில் இந்து - முஸ்லீம் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் யாராவது காஷ்மீர் சென்று பார்க்க விரும்பினால் தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு தெரிவித்தால் தான் அதற்கு ஏற்பாடு செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Article 370, PM Modi

    அடுத்த செய்தி