Home /News /national /

நமது தேசமே வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடமைப்பட்டிருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

நமது தேசமே வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கடமைப்பட்டிருக்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

வ.உ.சிதம்பரம் பிள்ளை

வ.உ.சிதம்பரம் பிள்ளை

'வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இலட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன' - பிரதமர் மோடி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர். பிரிட்டன் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

    கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை  பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5).

    வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இலட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நமது தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு அடைவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய இலட்சியங்கள் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகின்றன என பதிவிட்டுள்ளார்.



    மேலும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ஒட்டப்பிடாரம் தந்த உத்தமர் , வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், விடுதலைப் போராட்ட வீரராக அறியப்பட்ட சிந்தனையாளர், அறிஞர். தென்னகத்தின் திலகர் என்று போற்றப்பட்டவர்.



    சுதந்திரத்தை இரந்து பெறுவதைவிட, இறந்து பெறுவதே மேல், என்ற துணிச்சல் காட்டியவர் நம் வ.உ.சி அவர்கள். இந்தியாவின் மானம் காத்த இணையற்ற போராளியின் பிறந்தநாளில் அவர் புகழை வணங்கிப் போற்றுவதில் பாஜக பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.



    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சென்னையில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் திருவுருவ சிலைக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: BJP, PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி