முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. பிரதமர் மோடி விமர்சனம்

நாட்டின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. பிரதமர் மோடி விமர்சனம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

PM Modi : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை காட்டுவதாக பிரதமர் மோடி விமர்சித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாட்டின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸின் வெறுப்புணர்வு அரசியல் அவையில் அம்பலமாகியுள்ளது எனவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, குடியரசுத் தலைவரின் உரை தொலைநோக்கு பார்வை கொண்டது என்றும் அதனை எதிர்க்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை காட்டுவதாக விமர்சித்த பிரதமர் மோடி, ஊடகங்களில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்எனக் கூறினார். வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பால் உலக நாடுகள் தள்ளாடும் நிலையில், அந்த பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

Also Read:  ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளதாக சுட்டிககட்டிய பிரதமர் மோடி, செல்போன் உற்பத்தி, எரிசக்தி துறை என ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்து வருவதாகக் கூறினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றதாக பிரதமர் சுட்டிக்காட்டிய நிலையில், அவரது பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

First published:

Tags: BJP, Congress, Modi, Modi speech, Parliament, Rahul gandhi