Home /News /national /

பிரதமர் மோடிக்கு 12 கோடியில் புதிய கார்..அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன?

பிரதமர் மோடிக்கு 12 கோடியில் புதிய கார்..அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனக்கு தேவையான காரை பிரதமர் கேட்டுப்பெறுவதில்லை. அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தான் நிலைமைக்கு தகுந்தவாறு, பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

  பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டுக்காக சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய Mercedes-Maybach S650 கார் வாங்கப்பட்டுள்ளது. உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த காரில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

  சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி மேபேக் கூலிங் கிளாஸ்களை அணிந்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அவரது பாதுகாப்பு கான்வாயில் உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் இணைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்த போது அவரை வரவேற்க இந்த காரில் தான் ஐதராபாத் இல்லத்திற்கு பிரதமர் சென்றார். அதன் பின்னர் மோடி பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  Mercedes-Maybach S650 Guard 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

  இந்த காரின் ஜன்னல்களில் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளதால் ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகள் கூட இதை அசைக்க முடியாது. 2 மீட்டர் தொலைவுக்குள் 15 கிலோ TNT குண்டுகள் வெடித்தாலும் கூட இந்த காரில் உள்ளவர்களுக்கு எதுவும் ஆகாது. எரிவாயு தாக்குதல் நடத்தப்பட்டால் கூட உள்ளே இருப்பவர்கள் சுவாசிக்க தனியாக ஆக்சிஜன் சப்ளை செய்யும் வசதியும் இதில் உள்ளது. ERV என்ற வெடிகுண்டு தாக்குதல் தடுப்பு சோதனைக்கான சான்றிதழையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

  இதையும் படிங்க: கொரோனா பாதித்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் அறிவிப்பு...!


  இந்தக் காரின் எரிபொருள் டேங்க் விஷேச உலோகத்தால் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் தாக்குதல்களில் ஏற்படும் ஓட்டைகள் தானாகவே சரிசெய்துகொள்ளும். AH-64 Apache tank attack ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தில் தான் இந்தக் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை.

  தனக்கு தேவையான காரை பிரதமர் கேட்டுப்பெறுவதில்லை. அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தான் நிலைமைக்கு தகுந்தவாறு, பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார்கள் தற்போது பிரதமரின் கான்வாயில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!


   

  குஜராத் முதலமைச்சராக இருந்த போது குண்டு துளைக்காத மகேந்திரா ஸ்கார்பியோ காரை மோடி பயன்படுத்தினார். 2014-ல் முதல்முறையாக பிரதமர் ஆன போது BMW 7 Series ரக உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரில் வலம் வந்தார். அதன்பிறகு லேண்ட் ரோவர், டொயோடா லேண்ட் குரூசர் போன்ற கார்களை அவர் பயன்படுத்தினார்.

  கடந்த ஆண்டு Mercedes-Maybach S600 Guard ரக கார் இந்தியாவில் 10.5 கோடி ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. எனவே S650 Guard காரின் விலை 12 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

  Also read : ‘காணாமல் போனவர்’ விளம்பரத்தின் மூலம் ஷெர்வானியை பிரபலமாக்கிய சுல்தான் கடை!

  Published by:Murugesh M
  First published:

  Tags: Narendra Modi, PM Modi, Prime Minister Narendra Modi

  அடுத்த செய்தி