நாடு முழுவதும் கத்திரி வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில், வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ள நிலையில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமரின் தலைமை செயலாளர், பிரதமரின் ஆலோசகர், அமைச்சரவை செயலாளர், உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் நிலவி வரும் வெப்பம்,அனல்காற்றை எதிர்கொள்ளுதல் மற்றும் வரவிருக்கும் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.