Home /News /national /

இந்தியாவின் அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல்

இந்தியாவின் அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு, அங்கு பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதேநேரம், அமேதி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு, அங்கு பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஷாஜஹான்பூரில் 594 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த அதிவேக நெடுஞ்சாலை 36,230 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. 594 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை மீரட், ஹாபூர், புலந்த்ஷாஹர், அம்ரோஹா, சம்பல், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாக செல்லும். இதன்மூலம், டெல்லி அகமதாபாத் இடையேயான பயண நேரம் 7 மணி நேரமாகக் குறையும். சாலையில் 7 ரயில்வே மேம்பாலங்கள், 14 பெரிய பாலங்கள், 126 சிறிய பாலங்கள் 381 அடி நிலவழிகளும் இடம் பெற்றிருக்கும். மூன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்திய விமான படை விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் ஓடுபாதை அமைக்கப்படுகிறது.





    அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த தலைமுறைக்கான சிறந்த கட்டமைப்புகளுடன் உத்தர பிரதேசம் நாட்டிலேயே நவீன மாநிலமாக மாறி வருவதாக தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலை ஏராளமான வேலை வாய்ப்புகளையும் சிறுகுறு தொழில்சாலைகளுக்கு பெரும் பயனையும் அளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

    உபியில் ஏராளமான விமான நிலையங்களும் ரயில் நிலையங்களும் திறக்கப்பட உள்ளன. இவை உத்தர பிரதேச மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.



    இதனிடையே, அமேதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, தவறான முறையில் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்தியது மற்றும் கொரோனா பேரிடரை தவறான முறையில் கையாண்டது உள்ளிட்ட காரணங்களால் நாட்டு மக்கள் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பதாகவும் சாடினார்.

    இந்துத்துவா தனியாக கங்கை நதியில் புனித நீராடுவார். இந்துக்கள் கோடி கணக்கில் ஒன்றாக இணைந்து கங்கையில் புனித நீராடுவார்கள். 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகுல் காந்தி, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு சென்றுள்ளார். அமேதியின் வீதிகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் காணப்படுவதாகவும், மக்கள் முகங்களில் கோபமும் ஏமாற்றமும் தென்படுவதாகவும் ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி