Home /News /national /

பிரதமர் நரேந்திர மோடி உத்வேகத்தின் ஊற்று: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிரதமர் நரேந்திர மோடி உத்வேகத்தின் ஊற்று: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் உங்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார் என்றால் அவர் முழுமையாக உங்களை நம்புகிறார் என அர்த்தம் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். 

  மற்றவர்களின் கருத்துகளை பொறுமையுடன் கேட்பதில் பிரதமர் நரேந்திர மோடி சிறந்தவர் என்றும் எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்து வருவதாகவும், மோடி உத்வேகத்தின் ஊற்றாக திகழ்கிறார் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில்  அமைந்து 8 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்நிலையில், மத்திய கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்  துறை அமைச்சர் கிரிராஜ் சிக் நியூஸ்18 ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நான் அவரிடம் மாநில அமைச்சராக சென்று கேட்டாலும் சரி, கேபினட் அமைச்சராக இருந்தாலும் சரி,  மக்களின் வாழ்க்கையை உயர்த்த நினைக்கும் எந்தவொரு யோசனையையும் நான் பேசினால், அதை அவர் தீவிரமாகக் கேட்டு விவாதம் செய்வார், அது நன்றாக இருந்தால். பின்னர் அவர் அதை நிறைவேற்றுவார். இதுவே என்னை மிகவும் ஊக்கப்படுத்திய அவரது  மிகப்பெரிய பண்பு. இத்தகைய குணங்கள் பின்பற்றத்தக்கவை என தெரிவித்தார்.

  அனைவரின் கருத்துகளையும் பொறுமையாகவும் அக்கரையோடும் பிரதமர் மோடி கேட்பார் என்றும் அவரை போன்று பிறர் பேச்சுகளை கேட்கும் நபர் வேறுயாரும் இல்லை என்றும் கிரிராஜ் சிங் உறுதியோடு தெரிவித்தார்.

  பிரதமரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் அவரது மற்றொரு குணாதியசம், அவர் புதுமைகளை ஊக்குவிக்கிறார், அது மக்களின் நன்மைக்காக இருந்தால், அவர் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று சிங் கூறினார்.

  “பொறுப்புக்கூறலில் பிரதமர் மோடி உயர்ந்தவர். பொறுப்புக்கூறலும் பொறுப்பும் பிரதமரின் ஆட்சி மந்திரம். இதிலும் கூட, அவர் முன்மாதிரியாக இருக்கிறார். பல மணிநேர சுற்றுப்பயணங்களில்  மிகவும் பரபரப்பாக இருந்தபோதிலும், அவர் வேலைக்குத் தயாராகிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என்னிடம், பிரதமர் அதிகாலை 4 மணிக்கு விமானத்தில் இருந்து இறங்கி 11 மணிக்கு அமைச்சரவைக்கு தயாரானார் என்று கூறினார். இன்னும் 10 ஆண்டுகள் பிரதமர் வழிகாட்டினால் இந்தியா வல்லரசாகும்” என்று கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்ட முதன்மையான எட்டு திட்டங்கள்


  பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத்  தொலைநோக்குப் பார்வை தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும், மோடி அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பது  பெருமையளிப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 'ஆத்மநிர்பர் பாரத் என்ற மந்திரத்தை பிரதமர் வழங்கினார் என்று நான் நம்புகிறேன், இதை ஒவ்வொரு அமைச்சகமும் பின்பற்றுகிறது. பாதுகாப்பு, விவசாயம் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதித் துறைகளில் தன்னிறைவு பெறுவதைப் பற்றி வேறு யாரும் சிந்திக்கவில்லை' என பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் திட்டம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

  மேலும், பிரதமர் உங்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார் என்றால் அவர் முழுமையாக உங்களை நம்புகிறார் என அர்த்தம் என்றும் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.  ஒரு செயலை முடிப்பதில் பிரதமர் கடுமையான உழைப்பாளி என கட்சியினர் கூறுவது தொடர்பாக பேசிய கிரிராஜ் சிங், இதை நீங்கள் கடுமையான உழைப்பாளி அல்லது உத்வேகத்தின் ஊற்று என இரண்டில் எதை கூறி அழைப்பீர்கள்.  பிரதமர் நரேந்திர மோடியே இவ்வளவு கடினமாக உழைக்கும்போது, நம்மால் முடிந்த சிறப்பான பங்களிப்பை கொடுத்துவிட வேண்டும் என கட்சியினர் அனைவருமே எண்ணுவார்கள் என கூறினார்.

  மேலும் படிக்க: பிரதமர் மோடியின் தொடர் வெற்றிகள் சாத்தியமானது எப்படி?


  பிரதமரின் ஒழுக்கத்திற்காகப் பாராட்டிய சிங், உலகின் மிக சக்திவாய்ந்த மனிதராகக் கருதப்பட்டாலும், அவர் ஒருபோதும் அமைப்பைப் புறக்கணிப்பதில்லை என்றும், கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவை அவர் மிகவும் மதிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

  “தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அனில் தவே (மோடியின் முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர்) இயற்கை எய்திய நேரம் அது. அரசியல்வாதிகளின் மோசமான பழக்கம் என்னவென்றால், அவர்கள் தங்கள் உடல்நிலையை மறந்துவிடுவார்கள், அதை நாம் புறக்கணிக்கக்கூடாது என்று மோடி  என்னிடம் கூறினார், ”என்று அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

  மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து பேசிய அவர், “ பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கும்போது நாட்டை உள்ளேயும் வெளியேயும் விமர்சிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்துகொண்டு நாட்டை அவமதிக்கலாம், ஆனால் இன்று, நமது கொரோனா தடுப்பு செயல்முறைகளுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவிக்கிறார்” என குறிப்பிட்டார்.

  தனது துறை குறித்த பிரதமர் மோடியின் பார்வை குறித்தும் கிரிராஜ் சிங் மெச்சும்படி கூறினார். இது தொடர்பாக அவர், “இன்று கிராமங்களில் நலவாழ்வு மையங்கள் உள்ளன. 24,000 ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாலின வேலைவாய்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள் - சுயஉதவி குழுக்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி வந்தபோது 2.35 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 8.27 கோடி உறுப்பினர்களாக உள்ளது. இன்று 5 லட்சம் கோடிக்கும் அதிகமான வங்கி இணைப்புகள் உள்ளன. ஜன்தன் திட்டத்தின் கீழ் பெண்கள் 40 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து சுமார் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன, எட்டு ஆண்டுகளில் 2.5 கோடி வீடுகளை கட்டியுள்ளோம், ஒவ்வொன்றிலும் மோடியின் முத்திரை உள்ளது” என தெரிவித்தார்.

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Modi, PM Narendra Modi

  அடுத்த செய்தி