ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜெர்மனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மோடி.. வைரலாகும் புகைப்படம்

ஜெர்மனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மோடி.. வைரலாகும் புகைப்படம்

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

கடந்த 1993ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக ஜெர்மனி சென்ற நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் அவர் எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக ஜெர்மனி சென்றார்.ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அவரின் பயண குறிப்பில் இடம்பெற்றுள்ளன. பெர்லினில் இந்திய பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் சென்றடைந்தார்.

இன்று அவர் பிரான்ஸ் சென்று மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பின்னர் இந்தியா திரும்பவுள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளாத நிலையில், இந்த ஆண்டின் முதல் சுற்றுப்பயணம் என்பதால் மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்றுள்ளது.

நரேந்திர மோடி

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் மோடி எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தாடி, மீசை என்பது பிரதமரின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், இந்த புகைப்படத்தில் தாடி, மீசை இல்லாமல் அவர் உள்ளார்.

கடந்த 1993ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது அவர் எடுத்துகொண்ட புகைப்படம் இது என கூறப்படுகிறது. புனித ரோமானியப் பேரரசை நிறுவிய மேற்கு ஐரோப்பாவின் இடைக்கால பேரரசர் சார்லமேனின் சிலை முன்பாக அவர் எடுத்துகொண்ட இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Germany, PM Narendra Modi, Viral