• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • பயங்கரவாதத்தை பயன்படுத்தும் நாடுகளுக்கு அவற்றாலேயே அச்சுறுத்தல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு மோடி மறைமுக எச்சரிக்கை

பயங்கரவாதத்தை பயன்படுத்தும் நாடுகளுக்கு அவற்றாலேயே அச்சுறுத்தல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு மோடி மறைமுக எச்சரிக்கை

ஐ.நா.வில் மோடி உரை

ஐ.நா.வில் மோடி உரை

இந்தியாவின் பன்முகத் தன்மையே வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம் எனக் கூறிய பிரதமர் மோடி, இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது அது உலகம் முழுவதும் எதிரொலிப்பதாகவும் தெரிவித்தார். 

 • Share this:
  இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கு உலகம் முழுவதுமுள்ள தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நாடுகளுக்கே அவை மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றும் பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

  மூன்று நாள் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கான குவாட் அமைப்பின் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்புக்குப் பின், முன்னணி அமெரிக்க தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

  அதைத்தொடர்ந்து நியூயார்க் சென்றடைந்த மோடி, ஐ.நா சபையின் 76-வது கூட்டத்தில் உரையாற்றினர். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளில் இல்லாத பெருந்தொற்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் எதிர்கொண்டுள்ளதாக கூறினார். கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

  ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், அங்கு பயங்கரவாதம் வளர்ந்துவிடாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட மோடி, பிற நாடுகள் தங்களது சுயலாபத்திற்காக ஆப்கான் மண்ணை பயன்படுத்தாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.

  இதையும் படிங்க: அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு


  ஆப்கனில் வசிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உலக நாடுகளுக்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகக் கூறிய மோடி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்தார்.

  சர்வதேச நாடுகளின் வர்த்தக ஜீவாதாரமான பெருங்கடல்களை, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பது அவசியம் எனக் கூறி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை மறைமுகமாக சாடினார். பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று தோன்றிய பகுதியை கண்டறிவது உள்ளிட்ட விவகாரங்களில் ஐ.நா போன்ற அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை சிதைக்கப்படுவதாகவும்,  அதை தவிர்க்க அதுபோன்ற அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார்.

  பகுத்தறிவு, முற்போக்கு மற்றும் அறிவியல் அடிப்படையிலான உலகத்தை ஏற்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். இந்தியாவின் பன்முகத் தன்மையே வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம் எனக் கூறிய அவர், இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்போது அது உலகம் முழுவதும் எதிரொலிப்பதாகவும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு நெத்தியடி பதில்கள்: யார் இந்த சினேகா தூபே?


  சிறு வயதில் தேனீர் கடையில் தந்தைக்கு உதவியதை நினைவுகூர்ந்த மோடி, தற்போது 4-வது முறையாக ஐ.நா அவையில் பேசுவதே இந்திய ஜனநாயகத்தின் பலம் என்றும் கூறினார். நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை டிரோன்கள் மூலம் கண்காணித்து நிலங்களை அளந்து ஏழைகளுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

  12 வயதுக்குட்பட்டோருக்கு அளிக்கக் கூடிய டி.என்.ஏ தடுப்பூசியை உருவாக்கியுள்ளதுடன், மூக்கு வழியே வழங்கக்கூடிய சொட்டு மருந்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு உலக நாடுகளின் உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: