காங்கிரஸ் அறிவித்த வறுமை ஒழிப்புத்திட்டம் கேலிக்கூத்தானது - பிரதமர் மோடி விமர்சனம்

பயங்கரவாத முகாமை தாக்கியது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதாக குற்றம் சாட்டிய பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், பாகிஸ்தானில் யார் ஹீரோ ஆவது? என எதிர்க்கட்சிகள் போட்டி போடுவதாகவும் விமர்சித்தார்.

news18
Updated: March 29, 2019, 10:03 AM IST
காங்கிரஸ் அறிவித்த வறுமை ஒழிப்புத்திட்டம் கேலிக்கூத்தானது - பிரதமர் மோடி விமர்சனம்
பிரதமர் மோடி
news18
Updated: March 29, 2019, 10:03 AM IST
காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வாழ்வாதாரத் தொகை வழங்கும் திட்டம் கேலிக்கூத்தானது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இந்தியர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர் என்பதையே, திரண்டிருக்கும் கூட்டம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்தியாவையும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ள இந்தியாவையும் ஒப்பிட்டு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், வாரிசு அரசியலை முன்னெடுக்கும் ஊழல் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா பின்னடைவை சந்திக்கும் என எச்சரித்தார்.

புதிய இந்தியா பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்டவர்களுக்கும், கொள்கை உறுதியற்றவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது எனக் கூறிய பிரதமர், காங்கிரஸ் அறிவித்துள்ள மாதம் 6,000 ரூபாய் வழங்கும் திட்டம் கேலிக்கூத்தானது என விமர்சித்தார்.
Loading...


ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகளை தாம் தொடங்கிய போது அதைக் கேலி செய்தவர்கள், இன்று அதே கணக்கில் பணம் செலுத்தப்போவதாக கூறுவதாகவும் அவர் சாடினார்.

பயங்கரவாத முகாமை தாக்கியது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதாக குற்றம்சாட்டிய பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், பாகிஸ்தானில் யார் ஹீரோ ஆவது என எதிர்க்கட்சிகள் போட்டி போடுவதாகவும் விமர்சித்தார்.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை நடத்த வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியபோது, காங்கிரஸ் அரசு அதைத் தள்ளிப்போட்டதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை வலிமை மற்றும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு இந்த முடிவு நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டதாகவும் சாடினார்.

Also see...

First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...