முந்தைய பொதுக்கூட்டங்களில் என்ன பேசினோம் என்பதையே தெரியாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிவருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் 7-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக-வுடன் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, மறைமுக கூட்டு வைத்திருப்பதாகவும், பாஜக-வின் பி டீம் போல தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தான் என்ன பேசினோம் என்பதையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறந்துவிட்டு பேசுவதாக தெரிவித்தார். தனது உதவியாளர்கள் எழுதிக் கொடுக்கும் குறிப்புகளை வைத்துக் கொண்டே அவர் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக மட்டுமே ஜனநாயக கொள்கைகளுக்கு மதிப்பளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாஜக-வின் பி அணியாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி இருப்பதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை மறுத்த பிரதமர், காங்கிரஸும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் பாஜக-வின் பி அணியாக மதச்சார்பற்ற ஜனதாதளம் இருந்ததாகக் கூறிய காங்கிரஸ், பின்னர் என்ன செய்தது என்று அனைவருக்கும் தெரியும் என்று பிரதமர் கூறினார். இதேபோல, தெலங்கானா-விலும் நடைபெறலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.