குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில், பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர்
மோடி காணொலி வாயிலாகபயனாளர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பிரதமர் பேசினார். அவரிடம் பார்வை பறிபோனது குறித்து கேட்டார். அப்போது, அந்த நபர் தான் சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கண்பார்வை பாதிக்கப்பட்டதாகவும், இதனை சரி செய்வதற்கு தீர்வுகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, அவரிடம் உங்களின் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கேட்டார்.
அதற்கு, தனக்கு மூன்று மகள்கள் உள்ளதாகவும், அதில் ஒருவர் மருத்துவம் பயில விரும்புவதாக கூறினார். உடனே அருகில் இருந்த அவரின் மகளிடம் பேசிய பிரதமர், மருத்துவர் கனவு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாணவி, பார்வை குறைபாட்டால் தனது தந்தை சந்திக்கும் இன்னலை கண்டு, மருத்துவம் பயில விரும்புவதாக கூறினார்.
இதைக் கேட்ட பிரதமர், உணர்ச்சிவசப்பட்டார். தொடர்ந்து, அந்த சிறுமியன் மன உறுதியை பாராட்டிய மோடி, ‘இந்த கருணைதான் உங்களின் வலிமை’ என்றார்.
பின்னர், பேசிய பிரதமர், தங்களின் மகள்களின் கனவு மெய்ப்பட உதவி தேவைப்பட்டால், தான் அதை செய்வதாக உறுதியளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.