வரலாற்றுச் சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிறைவடைந்தன.

வரலாற்றுச் சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: September 18, 2020, 6:38 PM IST
  • Share this:
வரலாற்றுச் சிறப்புமிக்க பிகாரின் கோசி ரயில் பாலத்தை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1934ம் ஆண்டு பெருவெள்ளம் மற்றும் நிலநடுக்கம் காரணமாக கோசி ரயில் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதனைதொடர்ந்து 86 ஆண்டுகளுக்கு பிறகு கோசி ஆற்றின் குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003 - 2004 ஆண்டுகளில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிறைவடைந்தன.


Also read... தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி விகிதம் 10% கீழ் குறைந்தது

இந்த ரயில் பாலத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்துடன் மேலும் 3000 கோடி ரூபாய் மதிப்பில் மின்மயமாக்கப்பட்ட 12 ரயில் வழித்தடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதனால் பீகார், மேற்கு வங்கம் மற்று கிழக்கு பிராந்திய ரயில்வே கட்டமைப்பு வலிமைபெறும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading