அமெரிக்க அதிபர்களுக்கு அடுத்ததாக, ட்விட்டரில் புதிய உச்சம் தொட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

ட்விட்டரில் தற்போது 6 கோடி பின்தொடர்வோரை பெற்றுள்ளதன் மூலம், உலக அளவில் பிரபலமான 3வது தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது. இதன்மூலம், உலகில் அதிகமானோர் பின்தொடரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக பிரதமர் உருவெடுத்துள்ளார்.

  உலக அளவில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய சமூக ஊடகமாக டிவிட்டர் திகழ்கிறது. இதன்மூலம், தங்களுடைய கருத்துகளை அவர்கள் மக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், உலக அளவில் டிவிட்டரில் அதிகமானோரால் பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். தற்போது டிவிட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது.

  2009 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போதுதான், இந்த டிவிட்டர் கணக்கை பிரதமர் மோடி தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு ஒரு லட்சமாக அதிகரித்த அவரது பின்தொடர்வோர் எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்தது. கடந்த மார்ச் மாதம் தனது டிவிட்டர் கணக்கை ஒப்படைக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.  ஆனால் அது உலக பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கான அறிவிப்பு என்பது தாமதமாகத்தான் அனைவருக்கும் தெரியவந்தது.

  அன்றைய தினம் பிரதமரின் டிவிட்டர் கணக்கை சென்னையைச் சேர்ந்த ஸ்னேகா மோகன்தாஸ் உட்பட 7 பெண்கள் கையாண்டனர்.  அப்போது அவரது டிவிட்டர் கணக்கை 5 கோடியே 33 லட்சம் பேர் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். தற்போது 6 கோடி பின்தொடர்வோரை பெற்றுள்ளதன் மூலம், உலக அளவில் பிரபலமான 3-வது தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

  12 கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்வோருடன் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடத்திலும், 8 கோடியே 30 லட்சம் பின்தொடர்வோருடன் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது இடத்திலும் உள்ளனர்.

   
  Published by:Vijay R
  First published: