ஆட்சி என்ற பெயரில் மேற்கு வங்காளத்தை அலங்கோலப்படுத்தியுள்ளார் மம்தா: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி

ஆட்சி என்ற பெயரில் மேற்கு வங்காளத்தை மம்தா பானர்ஜி அலங்கோலப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  மேற்கு வங்காளத்தின் பர்தமானில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆட்சி என்ற பெயரில் மேற்கு வங்காளத்தை மம்தா பானர்ஜி அலங்கோலப்படுத்தியுள்ளதாகவும், மக்கள் 4 கட்ட வாக்கெடுப்புகளில் திரிணாமுல் காங்கிரஸை அகற்றி விட்டதாகவும் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவமதிப்பதாக குற்றம் சாட்டிய மோடி, தன்னை வங்காளப்புலி என்று அழைத்துக் கொள்ளும் மம்தாவின் அனுமதியின்றி அவரது கட்சியினர் இவ்வாறு பேசமாட்டார்கள் என்று சாடினார்.

  மேலும் படிக்க... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ்-க்கு தீவிர சிகிச்சை 

  மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை

  மேலும் நாளுக்கு நாள் மம்தா பானர்ஜியின் கோபம் அதிகரித்து வருவதாகவும், அவரது கோபத்தை தணிக்க தன் மீது எத்தனை அவதூறு வேண்டுமானாலும் பரப்பிக் கொள்ளட்டும் என்றும், ஆனால் மேற்கு வங்காளத்தின் கண்ணியத்தையும், பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: