ஹோம் /நியூஸ் /இந்தியா /

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக யாத்திரை - ராகுலை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக யாத்திரை - ராகுலை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

ராகுல் காந்தி - பிரதமர் மோடி

ராகுல் காந்தி - பிரதமர் மோடி

ஒரு காலத்தில் சைக்கிளை கூட தயாரிக்காத மாநிலமாக இருந்த குஜராத், தற்போது விமானத்தை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது - பிரதமர் மோடி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வருவதற்காக, யாத்திரையில் ஈடுபட்டுள்ளதாக, ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார்.

  குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி சுரேந்திர நகரில் நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் உரையாற்றிய அவர், பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் மாநில அரசு புதிய தொழில் கொள்கையை வகுத்துள்ளதாக கூறினார்.

  ஒரு காலத்தில் சைக்கிளை கூட தயாரிக்காத மாநிலமாக இருந்த குஜராத், தற்போது விமானத்தை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் குஜராத்தின் பங்களிப்பு என்றும், அந்த உப்பை தின்றுவிட்டு சிலர் துஷ்பிரயோகம் செய்வதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

  Also Read : தலித் பெண் தண்ணீர் குடித்ததால் கோமியத்தால் தொட்டியை சுத்தம் செய்த மக்கள்

  20 ஆண்டுகளுக்கு முன் குஜராத் மாநிலம் 20 லட்சம் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்ததாகவும், தற்போது அதை விட கூடுதலாக இரண்டரை மடங்கு பாலை உற்பத்தி செய்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: BJP, Congress, PM Narendra Modi, Rahul gandhi