பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் 5ம் தேதி நிறைவடைகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கங்களை வென்றுள்ள வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ உயரே, உயரே பறக்கிறார். மாரியப்பன் தங்கவேலு எப்போதும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்துகிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா பெருமைக்கொள்கிறது” என்று குறிபிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாராலிம்பிக் : ஓரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா!
வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சரத் குமாரை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில், “ பிறரால் வெல்லமுடியாத சரத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டு வந்துள்ளார். அவரது வாழ்க்கை பயணம் பலரை ஊக்குவிக்கும். அவருக்கு வாழ்த்துக்கள் " என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பள்ளி திறப்பு உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம்!
முன்னதாக பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர் ஜப்பான் புறப்படுவதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் காணொலிக் காட்சியில் பேசியிருந்தார். அப்போது மாரியப்பன் தங்கவேலுவிடம் பேசிய மோடி, மீண்டும் தங்கம் வெல்ல வாழ்த்துக்களை கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mariyappan Thangavelu, PM Narendra Modi, Tokyo Paralympics