ஹோம் /நியூஸ் /இந்தியா /

தொழில்நுட்பத்தின் உதவியால் நீதித்துறை எளிமையாக்கப்பட வேண்டும்- பிரதமர் மோடி

தொழில்நுட்பத்தின் உதவியால் நீதித்துறை எளிமையாக்கப்பட வேண்டும்- பிரதமர் மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

கொலிஜியம் முறை மீது மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, கடந்த வாரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

நீதித்துறையை அனைவரும் எளிதல் அனுகும்படியான வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் அரசியலமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்  ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கும் சரியான நீதி சென்றடையும் வகையில் தொழில்நுட்பத்தின் உதவியால் நீதி நிர்வாகம் அமைய வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இந்தியாவில் சட்டம் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். உரிய நேரத்தில் நீதி கிடைப்பதற்காக இந்திய நீதித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை குறிப்பிட்ட மோடி, நீதி பரிபாலனம் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திர சூட், ஒழுக்கம் நிறைந்த உலகை நீதியின் பக்கம் வளைப்பதற்காக இந்திய நீதித்துறை பல்வேறு மாற்றங்ளை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கும் விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் தர உறுதியேற்போம் எனக் கூறினார்.

மேலும் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தனது அசுர வளர்ச்சியாலும், பொருளாதார முன்னேற்றத்தாலும்  உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன என பெருமிதத்தோடு கூறினார்.

இதையும் படிங்க: 'ஆடையில்லாத பெண்கள் அழகு'.. சர்ச்சை கருத்தால் சிக்கிய பாபா ராம்தேவ்.. 3 நாட்களில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

கொலிஜியம் முறை மீது மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, கடந்த வாரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறிய ரிஜூஜூ, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் நீதிபதிகள் நீதிபதிகளை தேர்வு செய்வதில்லை என்றும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதற்கு நீதித்துறையும் எதிர்வினை ஆற்றியிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில், பிரதமர் மோடி, சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜூ, தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டு நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை முன்வைத்தனர். இதனால் கொலிஜியம் தொடர்பான சர்ச்சைகள் விரைவில் சுமூக முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Chief justice of india, Narendra Modi