• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து, தனி விமானம் மூலம் இத்தாலி சென்றடைந்தார்.

  • Share this:
    அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும், 16வது ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று, பிரதமர் அங்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் பிரதமருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகளும், பிரதமரை நேரில் வந்து வரவேற்றனர்.

    இதையடுத்து, இத்தாலி தலைமையின் கீழ் அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற உள்ள, ஜி 20 உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதில் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இத்தாலி பிரதமர் மரியோ டிரகியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், நாளை வாடிகன் நகரில் போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

    பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: