கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவு. கொரோனா பரவலில் இருந்து மீண்டு நாம் இப்போது வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்திருக்கின்றோம். கொரோனா காலத்தில் மக்கள் முகக்கவசம் இன்றி இயல்பாக இருப்பதை பார்க்க முடிகின்றது. பண்டிகை காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கூறினார்.
மேலும், அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. தடுப்பூசி வரும்வரை கொரோனாவிற்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது. தடுப்பூசி விரைவில் தயாராகி வருகின்றது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி விரைவில் வழங்கப்படும்.
12,000 தனிமைப்படுத்தும் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா குறித்த அபாயம் இல்லாவிட்டால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கூறினார்.