பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை- பிரதமர் மோடி வலியுறுத்தல்

பண்டிகை காலங்கள் வரவுள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் தேவை- பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் மோடி
  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், ‘கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு 2,000 மையங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்துள்ளநிலையில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும். மனிதனைக் காப்பாற்ற போர் போன்று உலக அளவில் மிகப் பெரிய நடவடிக்களை எடுக்கப்பட்டுவருகின்றன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை நம்முடைய போராட்டம் ஓய்ந்துவிடாது.

நோய், நெருப்பு போன்றவற்றை நாம் எப்போதும் எளிதாகக் கருதக் கூடாது. இந்தியாவில் பெருமளவு கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.


பல நாடுகளில் கொரோனா முடிந்துவிட்டது என்ற நினைத்த நேரத்தில் மீண்டும் அதிகரித்துவிட்டது. கொரோனாவை வேராடுவீழ்த்தும் வரையில் இந்தியர்களின் போராட்டம் ஓய்ந்துவிடாது. கொரோனா தொற்று இல்லையென்று அஜாக்ரதையாக இருந்துவிட வேண்டாம்’ என்று தெரிவித்தார்.
First published: October 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading