இடைக்கால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான் - பிரதமர் மோடி

2019 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது . இந்த தேர்தலில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக வெற்றி பெற உள்ளது என்று அமித்ஷா கூறினார் 

Web Desk | news18
Updated: February 2, 2019, 10:46 PM IST
இடைக்கால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான் - பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Web Desk | news18
Updated: February 2, 2019, 10:46 PM IST
இடைக்கால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான் என்றும், மக்களவை தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டில் அனைத்து பிரிவு மக்களுக்குமான திட்டங்கள் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், தாகூர்நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வெறும் தொடக்கம் மட்டுமே. மக்களவை தேர்தலுக்கு பிறகான முழுமையான பட்ஜெட்டில் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்கள் இடம் பெறும். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவளிக்க வேண்டும்’ என்று பேசினார்.

மேலும்  தாகூர்நகரை தொடர்ந்து துர்காபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜியின் அரசு வளர்ச்சியை விரும்பவில்லை.  மத்திய அரசின் திட்டங்கள் அங்கு தொடங்கப்படாமலோ, மிக மெதுவாக செயல்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்

மேடையில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் தடுப்புகளை தாண்டிச்செல்ல முற்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா,   ‘2019 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது . இந்த தேர்தலில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக வெற்றி பெற உள்ளது’ என்று கூறினார்

 
First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...