• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம், ஜோ பைடன், கமலா ஹாரிஸ், டிம் குக் ஆகியோரை சந்திக்க திட்டம்

பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம், ஜோ பைடன், கமலா ஹாரிஸ், டிம் குக் ஆகியோரை சந்திக்க திட்டம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

செப்டம்பர் 24ம் தேதி  அதிபர் ஜோ பைடனுடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதமர் மோடி வர்த்தகம்,  முதலீடு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசவுள்ளார்.

  • Share this:
    பிரதமர் மோடி 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நாளை அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஆகியோரை மோடி சந்திக்கவுள்ளார்.

    கொரோனா தொற்று காரணமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறைந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்  வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் பெரியளவில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத அவர்,  4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை அமெரிக்கா செல்லவுள்ளார்.

    அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவகளுடன் குவாட் (Quad) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் அமெரிக்கா செல்லவுள்ளார்.  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் அவருடன் அமெரிக்கா செல்கின்றனர்.

    நாளை காலை 11 மணிக்கு இந்தியாவில் இருந்து புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி,   செப்டம்பர் 23ம் தேதி ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.  இதை தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். ஆப்பிள் சி.இ.ஒ. டிம் குக் உடனும் அவர் பேசவுள்ளார்.

    இதையும் படிங்க: எம்.எஸ்.சி படித்துவிட்டு துப்புரவு பணியாளர் பணி: உதவிக்கரம் நீட்டிய அரசு!


    அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அதன்பின்னர் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசுகிறார்.

    செப்டம்பர் 24ம் தேதி  அதிபர் ஜோ பைடனுடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதமர் மோடி வர்த்தகம்,  முதலீடு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசவுள்ளார். இதையடுத்து, ஜப்பான், ஆஸ்திரேலயா,  அமெரிக்க  நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, நான்கு நாடுகள் பங்கேற்கும் 'குவாட்' கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த சந்திப்பின்போது தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைப்பது தொடர்பாக அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: அக்டோபர் மாதம் திருப்பதி போக பிளானா? இது உங்களுக்கான செய்தி


    அடுத்த நாள் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் புறப்படும் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அன்றைய தினம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இக்கூட்டத்தில் அவர் உரையாற்றவுள்ளார்.  பின்னர், இம்மாதம் 27ம் தேதி பிரதமர் இந்தியா திரும்பவுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: