Home /News /national /

எதிரியே இல்லை என்று சொல்லும் மோடி, பயத்தால் புலம்புகிறார் - மு.க.ஸ்டாலின்

எதிரியே இல்லை என்று சொல்லும் மோடி, பயத்தால் புலம்புகிறார் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். அந்தப் போராட்டத்தில் மதவாத இந்தியாவை உருவாக்கி, 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ள நினைக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து, இந்தியாவை அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்டெடுப்போம் என்று பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்த பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து பயத்தால் புலம்புகிறார் என கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்டக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாஜக அரசுக்கு எதிரான தலைவர்களை அழைத்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுகூட்டம் நடத்தினார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, ”இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் இங்கு வந்திருக்கிறேன். நரேந்திர மோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி அவர்கள். மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும் அமித்ஷாவுமே பயப்படுவார்கள்.  அந்தளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருக்கக் கூடியவர் மம்தா பானர்ஜி அவர்கள்” என்று பேசினார்.



”சில மாதங்களுக்கு முன்பு வரை நரேந்திர மோடி தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா, எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார், எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது மோடிக்கு தெரிய வந்துள்ளதால் கோபத்தில் நம்மை திட்டுகிறார், பயத்தால் புலம்புகிறார்” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.



”பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. அவர் சொன்ன பொய்களில் மிகப்பெரிய பொய், நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா? இந்திய மக்கள் தலையில் கல்லைத்தான் போட்டார். வாயில் மண்ணைப் போட்டார். மொத்தத்தில் நாட்டு மக்களை குழிக்குள் தள்ளினார்”  என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.



”வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். அந்தப் போராட்டத்தில், மதவாத இந்தியாவை உருவாக்கி, 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ள நினைக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து, இந்தியாவை அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்டெடுப்போம்” என்று பேசினார்.

இறுதியாக மு.க.ஸ்டாலின், ”நம்முடைய சிந்தனை ஒன்று தான் “பாஜகவை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

Also watch : பாஜகவை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

Published by:Prabhu Venkat
First published:

Tags: BJP, DMK, Mamata banerjee, MKStalin, Narendra Modi, United India Rally

அடுத்த செய்தி