பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி! தலைநகர் டெல்லியில் தொடரும் திருட்டுச் சம்பங்கள்

இருசக்கர வாகனத்தில் வந்த தமயந்தி பெண் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, தமயந்தி பெண் மோடி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

news18
Updated: October 12, 2019, 7:03 PM IST
பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி! தலைநகர் டெல்லியில் தொடரும் திருட்டுச் சம்பங்கள்
தமயந்தி பென் மோடி
news18
Updated: October 12, 2019, 7:03 PM IST
டெல்லியில் சாலையில் நடந்து சென்ற பிரதமர் மோடியின் அண்ணன் மகளின் ஹேண்ட் பேக்கை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வழிப்பறி செய்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. அவர், டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த தமயந்தி பெண் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, தமயந்தி பெண் மோடி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்த அவர், ‘அந்தப் பையில் 56,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள் இருந்தன’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘இதுதொடர்பாக, சிவில் லைன் பகுதி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.


சில வாரங்களுக்கு முன்னதாக, அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய மோடியின் நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரின் மொபைல்போனையும் திருடர்கள் பறித்துச் சென்றனர். தெற்கு டெல்லிப் பகுதியிலும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் ஹேண்ட்பேக்கை சமீபத்தில் திருடியிருந்தனர்.

Also see:

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...