EXCLUSIVE | ’அரசின் பொறுப்புக்கு சாட்சியாக உள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை’ - பிரதமர் மோடி

'இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு ஆகும் வேளையில் நமது நாடு சாதித்திருக்க வேண்டியதை நாங்கள் 75 வழிவகைகள் மூலம் உறுதி செய்வோம்'.

Web Desk | news18
Updated: April 9, 2019, 7:21 PM IST
EXCLUSIVE | ’அரசின் பொறுப்புக்கு சாட்சியாக உள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை’ - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: April 9, 2019, 7:21 PM IST
நியூஸ் 18 தொலைக்காட்சிக்காக இரண்டாம் முறையாக சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரத்யேக நேர்காணலில் மோடி பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “நாட்டை மீண்டும் நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெறவிருக்கும் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் முதிர்ந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். முதன்முறையாக 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கும் வழி வகுக்கும் வகையில் இந்தத் தேர்தல் அறிக்கை உள்ளது.

ஐந்து ஆண்டுகளின் முடிவில் மட்டுமல்ல இடையிலும் இந்த அரசு பொறுப்புடனே செயல்படும் என்பதற்கான வெளிப்பாடு இது. எந்தவொரு கட்சியும் இதற்கு முன்னர் இதுபோல் செய்ததில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு ஆகும் வேளையில் நமது நாடு சாதித்திருக்க வேண்டியதை நாங்கள் 75 வழிவகைகள் மூலம் உறுதி செய்வோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தின் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டத்துக்கு நாங்கள் அடிக்கல் நாட்டியிருப்போம்.


கறுப்புப் பணத்தையும் ஊழலையும் எப்படிக் கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து இந்தத் திட்டங்கள் விளக்கும். தேசியப் பாதுகாப்புக்காக விவாதித்துள்ளோம். இதற்கு முன்னதாக வெளியான தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், அடித்தட்டு மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மிகப்பெரும் அநீதியை இளைத்துள்ளது. அவர்களின் வளர்ச்சிக்காக எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்த அறிக்கை பல விஷயங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் மூத்தோர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? கிராமப்புற வாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் செய்ய வேண்டிய வளர்ச்சி மாற்றங்கள் எவை? புதிய இந்தியாவை எப்படி உருவாக்குவது? ஒரு சாதாரண மனிதனின் ஆசையையும் நிறைவேற்றும் வகையில் முன்னேற்றத்துக்காக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது எப்படி? நம்பிக்கையற்றுக் கிடந்த இந்தியாவை 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் தன்னம்பிக்கை உடன் எழச் செய்துள்ளோம்.

ஒரு தனி மனிதனின் தேவைகளாக உள்ள வீடு, மின்சாரம், நீர், சாலைகள் ஆகியவற்றின் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு தனி மனிதனை அவனது எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் வலுப்படுத்துவோம்” எனக் கூறினார்.

Loading...



 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...