HOME»NEWS»NATIONAL»pm modis confidence has inspired the nation says mukesh ambani skd

பிரதமர் மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவில் மீட்கும் - முகேஷ் அம்பானி நம்பிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் நாட்டை விரைவில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்று ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவில் மீட்கும் - முகேஷ் அம்பானி நம்பிக்கை
முகேஷ் அம்பானி
  • Share this:

பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி, ‘பிரதமர் மோடி மற்றும் அவருடைய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவின் விரைவான மீட்புக்கு வழிவகுக்கும் மற்றும் அடுத்த ஆண்டுகளில் விரைவான பொருளாதார முன்னேற்றம்வரும். ஆற்றலின் எதிர்காலம் என்பது முன்னெப்போதுமில்லாத மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லரசு மற்றும் பசுமை மற்றும் தூய்மையா ஆற்றல் என்ற இலக்கை இந்தியா கொள்ளவேண்டும்.

21-ம் நூற்றாண்டின் பாதியில் தற்போது பயன்படுத்தப்படும் ஆற்றலின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக பயன்படுத்துவோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சீர்குலைப்பதிலிருந்து தீர்வுகள் வேண்டும். குறைந்த கார்பன், கார்பன் மறுசுழற்சி தொழில்நுட்பம் இந்த இலக்கை அடைய உதவும்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: