பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் குஜராத் மருத்துவமனையில் உயிரிழந்தார்

பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் உயிரிழந்தார்.

  • Share this:
    பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் மோடி கணவரை இழந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அலகாபாத்தில் வசித்து வந்தார். இவரது வயது 80. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதரதாஸின் சகோதரர் ஜெகஜீவன் தாஸின் மனைவியாவார். நரேந்திர மோடிக்கு சித்தி முறையாவார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அலகாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நர்மதாபெண் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் நர்மதாபென் மோடி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: