• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கொரோனா பரவல் எண்ணிக்கை நீண்டகாலத்துக்கு அதிகரித்து இருந்தால், கொரோனா உருமாற்றம் பெறவும், புதிய வகை வைரஸ்கள் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீத கொரோனா பாதிப்புகளும், 84 சதவீத உயிரிழப்புகளும் ஏற்படுவதாக குறிப்பிட்டார். கொரோனா பரவல் குறைந்துள்ளபோதிலும், சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

  குறிப்பாக, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார். இரண்டாவது அலைக்கு முன்னதாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இதே நிலை இருந்ததால், மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

  கொரோனா பரவல் எண்ணிக்கை நீண்டகாலத்துக்கு அதிகரித்து இருந்தால், கொரோனா உருமாற்றம் பெறவும், புதிய வகை வைரஸ்கள் உருவாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

  Also read... ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக்கொடி ஏற்றும் போது கொரோனா இறக்கப்பட வேண்டும் - தமிழிசை நம்பிக்கை 

  குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரவல் முடிந்துவிடவில்லை என்றும், ஊரடங்கு தளர்வுக்குப் பிந்தைய நிலவரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

  முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடுப்பூசிகளை வீணடிப்பதை தமது அரசு முழுமையாக தவிர்த்துள்ளதாக தெரிவித்தார். எனினும், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டுக்கு குறைவான தடுப்பூசியே விநியோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

  எனவே, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதல் அரிசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

  கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: