கொரோனா பாதிப்பில் இருந்து
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர
மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டார்.
இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது உத்தரப் பிரதேச பயணத்தை ரத்து செய்துள்ளார். அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டு பயணத்தில் உள்ளார்.
முன்னதாக நேற்று டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய பாதயாத்திரை நிறைவு விழாவில் சோனியா காந்தி நேரில் பங்கேற்றார். நேற்று பொது நிகழ்வில் சோனியா காந்தி பங்கேற்ற நிலையில் அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க:
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்கும் ராகுல் காந்தி.. கோவிட் தொற்று பாதிப்பால் சோனியா ஆஜராவது சந்தேகம்..
பிரதமர் மோடிக்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் எனவும், பொது வாழ்வில் இருக்கும் தலைவர்கள் பெருந்தொற்று காலத்தில் அக்கறையுடன் வாழ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.