இந்தியா-சீனா எல்லைப் பகுதியில், சீனா தரப்பு தன்னிச்சையாக எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள இந்தியா அனுமதிக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
CNN-News18 செய்தி ஊடகம் நடத்திய Town Hall நிகழ்வில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'சீனா இந்திய எல்லைப் பகுதியில் சில தன்னிச்சையான மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், இந்தியாவின் பெரும் முயற்சியால் அது தடுக்கப்பட்டது. இந்திய - சீன எல்லையில் எந்த மாற்றத்திற்கும் அனுமதிக்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உரசல் ஏற்படும் சர்ச்சைக்குரிய இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சில இடங்களில் இதற்கு தீர்வும் எட்டப்பட்டுள்ளது.
சீனர்களின் தன்னிச்சையான முடிவை அனுமதிக்க முடியாது என்பதில் மட்டும் தெளிவாக உள்ளோம். பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதில் அவர் ஒரு போதும் சமரசம் மேற்கொள்ள மாட்டார்.
1993,96 ஆகிய ஆண்டுகளின் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பெரும் படைகளை குவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு கல்வான் தாக்குதலுக்குப் பின் இரு தரப்பும் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகிறோம். பிரச்சனை முழுமையாக தீர்ந்து விட்டதா என்றால், அது இல்லை. அதேவேளை, சில முக்கிய முன்னேற்றங்கள் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன. இது மிகப் பொறுமையுடன் செய்ய வேண்டிய கடினமான பணி. அதேவேளை, எந்த வித சமரசமும் இல்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளோம்' எனப் பேசினார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் தற்போது முக்கிய சீர்திருத்தங்கள் - ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேச்சு
2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திடீரென ஆயிரக்கணக்கில் படைத் துருப்புகளை நிறுத்தி இந்திய ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். படைகளை முழுமையாக திரும்பப் பெறும் வரை இயல்பான உறவுக்கு இடமில்லை என சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி இடம் அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.