ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு திருவிழா.. 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு திருவிழா.. 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஏற்கனவே 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi | Tamil Nadu

  நாடு முழுவதும் இன்று நடைபெறும் வேலைவாய்ப்புத் திருவிழாவில் 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார்.

  மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

  அதனைத் தொடர்ந்து, கடந்த மாதத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

  இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குஜராத், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களைத் தவிர மற்ற 45 இடங்களில் இன்று முகாம்கள் நடைபெறுகின்றன.

  இதில் காணொலி மூலம் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்தமாக 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்குகிறார்.

  மேலும், புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு ஆன்லைன் மூலமான பயிற்சித் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Modi, PM Modi