ஒரே நாளில் 3 மாநிலங்களில் வாக்கு சேகரிக்கவுள்ள பிரதமர் மோடி !

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Tamilarasu J | news18
Updated: March 26, 2019, 7:51 PM IST
ஒரே நாளில் 3 மாநிலங்களில் வாக்கு சேகரிக்கவுள்ள பிரதமர் மோடி !
பிரதமர் நரேந்திர மோடி
Tamilarasu J | news18
Updated: March 26, 2019, 7:51 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் வியாழன்கிழமையன்று 3 மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்கிறார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சுமார் 300 க்கும் மேற்பட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ஏப்ரல் 11-ம் தேதி உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்காக அம்மாநிலத்தின் மீரட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கும் கூட்டங்களி்ல் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

மறுபக்கம் உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது கட்சி வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க:
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...