முகப்பு /செய்தி /இந்தியா / பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி எச்சரித்தது ஏன்?

பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி எச்சரித்தது ஏன்?

PM Modi

PM Modi

நீங்கள் மாறவில்லை என்றால் காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தன் கட்சி எம்.பிக்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர்களுக்கு பாஜக எம்.பிக்கள் வராமல் இருக்கும் விவகாரத்தில் கடுமை காட்டும் பிரதமர் மோடி, கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே தனது கட்சி எம்.பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் பிரதமரின் அறிவுரையை கடந்து எம்பிக்கள் சிலர் பாராளுமன்ற கூட்டங்களில் அவ்வப்போது கலந்துகொள்ளாமல் இருந்து வருவது மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இன்று அக்கட்சி எம்.பிக்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also read:  மதமாற்றம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலால் கிறிஸ்துவ பள்ளி சூறையாடல்

மூத்த அமைச்சர்களான அமித்ஷா, பியூஸ் கோயல், ஜெய்சங்கர், பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது, “தயவு செய்து பாராளுமன்றங்களில் நடைபெறும் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சொல்வது போல என்னால் எப்போதும் இதை உங்களிடம் வலியுறுத்தி சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் மாறவில்லை என்றால் காலப்போக்கில் மாற்றங்கள் நிகழும்.

சூர்ய நமஸ்காரம் செய்துவிட்டு கூட்டத்தொடருக்கு வாருங்கள். உங்களுக்கும் நல்லது, நாட்டு மக்களுக்கும் நல்லது” இவ்வாறு பிரதமர் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்றத்தில் சமீபத்தில் நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய தவறான தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம், கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட எதிர்கட்சி எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரதமர், பாஜக எம்.பிக்கள் வருகையை வலியுறுத்தி பேசியிருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

நவம்பர் 29ம் தேதி முதல் பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BJP, Modi