மம்தா என் தலையைக்கூட எட்டி உதைக்கலாம்... ஆனால்! - மேற்கு வங்கத்தில் மோடி ஆவேசம்

மோடி

திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றியுள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களை திருடுபவராக , கொள்ளையர்களின் தலைவராக மோடி இருப்பதாக மம்தா பேசியுள்ளார்

  • Share this:
    மேற்குவங்க அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக உள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி பாஜகவையும் அதன் தலைவர்களையும் கடுமையான சாடிவருகிறார். மம்தா சக்கரநாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மம்தா நாடகமாடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேத்னிபூர் பகுதியில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பேசிய மம்தா, பிரதமர் நரேந்திர மோடியை கொள்ளையர்களின் தலைவர் எனக் கடுமையாக சாடினார்.

    “ திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றியுள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களை திருடுபவராக, கொள்ளையர்களின் தலைவராக மோடி உள்ளார். நம்மிடம் இருந்து விலகிப்போனவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அவர்களை நான் நேசித்தேன். ஆனால் அவர்கள் துரோகிகள் ஆகிவிட்டனர். அவர்களை விட மோசமான துரோகிகள் இல்லை என்பது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

    மேற்கு வங்கத்தின் பங்குவாரா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை செய்தார். பிரதமரின் முகத்தை கால்பந்துபோல் சித்தரித்து அதனை மம்தாவின் கால்கள் எட்டி உதைப்பது போன்ற சித்திரங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ‘மம்தா நீங்கள் என் தலையில் உங்கள் கால்களை வைக்கலாம். மம்தா பானர்ஜி எனது தலையை கூட எட்டி உதைக்கலாம். அதை நான் அனுமதிப்பேன். ஆனால் மேற்கு வங்க மக்களின் கனவுகள், மாநில வளர்ச்சிகள் உதைபடுவதை என்றும் நான் அனுமதிக்க மாட்டேன். பங்குவாராவில் இருந்து மம்தாவுக்கு எதாவது ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மேற்கு வங்க மக்களுக்குச் சேவை செய்ய நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்” என்று பதிலடி கொடுத்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: