ஹிட்லரை போல செயல்படுகிறார் மோடி...! கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

இந்து மத புத்தகங்களில் எங்காவது, இஸ்லாமியர்களை தண்டியுங்கள் என்ற வாசகம் உள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

news18
Updated: March 23, 2019, 3:28 PM IST
ஹிட்லரை போல செயல்படுகிறார் மோடி...! கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
news18
Updated: March 23, 2019, 3:28 PM IST
கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமியர்களை தாக்கிய விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹிட்லரை போல மோடி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் ஹோலி பண்டிகையின் போது கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்டவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியை பிடிக்க ஹிட்லர் வழியை பின்பற்றுகிறார். சிறுபான்மை மக்களை கொல்ல ஹிட்லரும் இதுபோன்ற, குண்டர்களை வைத்து இருந்தார்.
Loading...


அதே வழியை மோடியும் பயன்படுத்த தொடங்கியுள்ளார் என்றார். இஸ்லாமியர்களை தாக்கியவர்கள் இந்துக்கள் இல்லை என்றும் அவர்கள் அரக்கர்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்து மத புத்தகங்களில் எங்காவது, இஸ்லாமியர்களை தண்டியுங்கள் என்ற வாசகம் உள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பாலிவுட் நடிகை புமி பெட்னேகரும் ட்விட்டரில் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.Also See...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...