ஹோம் /நியூஸ் /இந்தியா /

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.!- பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.!- பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மத்திய அரசு ஆன்மீக தலங்களின் பெருமையை மீட்டு எடுத்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ujjain, India

  அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  குஜராத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு, பிரதமர் மோடி மத்திய பிரதேசத்துக்கு நேற்று சென்றார். அங்குள்ள உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயிலுக்கு சென்ற அவர், மூலவருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பிரதமருடன் கோயிலுக்கு சென்றிருந்தனர்.

  மகாகாலேஸ்வரர் கோயிலை 850 கோடி ரூபாய் செலவில், பக்தர்களுக்காக நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 316 கோடி ரூபாய் செலவில், கோயில் வளாகம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. 108 தூண்கள், அலங்கார திரிசூல வடிவமைப்பு, சிவலிங்கம் மற்றும் நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, வேதமந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, அங்கு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

  தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான ஜோதிர் லிங்கங்களின் வளர்ச்சி இந்தியாவின் ஆன்மீக உணர்வை வலுப்படுத்துகிறது என்றார். மத்திய அரசு ஆன்மீக தலங்களின் பெருமையை மீட்டு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

  அயோத்தியில் மாபெரும் ராமர் கோயிலை கட்டுவதற்கான பணிகள் முழுவேகத்தில் நடைபெறுவதாக அவர் கூறினார். இந்தியாவின் கலாச்சாரத்துக்கு பெருமைசேர்க்கும் வகையில், காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Madhya pradesh, PM Modi, Tamil News