கொரோனா அச்சுறுத்தல்: முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல்: முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி.
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருடனும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் கலந்து பிரதமர் ஆலோசித்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. காணொளிக் காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் ஊரடங்கு அமல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading