தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்த பிரதமர்!

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்த பிரதமர்!

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 1 ம் தேதி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

 • Share this:
  குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்ச்-இந்தியாவின் கீழ் ஆறு மாநிலங்களில் நடைபெற்று வரும் லைட் ஹவுஸ் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்ரோன் மூலம் ஆய்வு செய்தார்.

  தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 1 ம் தேதி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான செயல்முறையால் இயக்கப்படுகிறது என்றார்.

  குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்ச்-இந்தியாவின் கீழ் தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், திரிபுரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரான சென்னை, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா ஆகிய இடங்களில் வீடு கட்டப்பட்டு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  413 சதுர அடியில் ஒரு படுக்கையறை, பால்கனி உள்ளிட்ட அம்சங்களுடனும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், பேரிடரை தாங்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

  இந்த திட்டம் மூலம் 12 மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட முற்பட்டு வருகின்றன. 6 மாநிலங்களில் நடைபெறும் இந்த திட்டங்களை ட்ரோனை பயன்படுத்தி பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார்.

  இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை கட்டுவதற்கு குறைந்த நேரமே எடுக்கும், அவை மலிவு விலையிலும், அதேநேரத்தில் வசதியாக இருக்கும் என்றார். இதற்காக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளின் நவீன கட்டுமான நடைமுறைகள் நடைமுறைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  Also read: மதுரையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர் மரணம்; இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை!

  இதற்கு சிமெண்ட் கலவை அல்லது வண்ணப்பூச்சுகள் தேவையில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட சுவர்களை வைத்து இது வடிவமைக்கப்படவுள்ளது. அதேபோல் அகர்தலாவில் எஃகு பிரேம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். வீடுகள் பூகம்ப அபாயத்திலிருந்து தடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.

  அதேபோல் ராஞ்சியில் ஜெர்மனியில் இருந்து உருவாக்கப்பட்ட 3D உற்பத்தி முறையை பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு அறையும் தனித்தனியாக கட்டப்படும். பின்னர் முழு அமைப்பும் ஒரு தொகுதி போல சேர்க்கப்படும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
  Published by:Esakki Raja
  First published: