• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமெரிக்காவில் 5 முக்கிய நிறுவன தலைவர்களை தனித்தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி!

அமெரிக்காவில் 5 முக்கிய நிறுவன தலைவர்களை தனித்தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி!

narendra modi

narendra modi

அமெரிக்காவிடமிருந்து 30 ஆயுதம் தாங்கிய பிரிடேட்டர் ரக ட்ரோன்களை இந்தியா வாங்க இருக்கும் நிலையில் அதனை தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவன தலைவரை பிரதமர் சந்திக்க உள்ளார்.

  • Share this:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குவால்காம் நிறுவன தலைவருடன் இன்று தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடோப், ஜெனரல் அட்டாமிக்ஸ், பிளாக் ஸ்டோன் மற்றும் ஃபர்ஸ்ட் சோலார் ஆகிய மேலும் 4 நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தனித்தனியாக பேச இருக்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக்கொண்ட பின் முதல் முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து பேச இருக்கிறார். இதனிடையே அமெரிக்காவில் 5 முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து தனித்தனியாக பேச இருக்கிறார். ஐடி துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் மரபுசாரா எரிசக்தி துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிறுவன தலைவர்களை பிரதமர் சந்தித்து பேசுகிறார்.

அதன்படி வாஷிண்டனில் குவால்காம் நிறுவன தலைவரான கிறிஸ்டியனோ அமானை பிரதமர் இன்று சந்தித்து பேசியிருக்கிறார். குவால்காம் நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தி, வயர்லெஸ் தொழில்நுட்ப ரீதியிலான சேவைகள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Also Read:  8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

குவால்காம் தலைவரையடுத்து இன்றே அடோப், ஜெனரல் அட்டாமிக்ஸ், பிளாக் ஸ்டோன் மற்றும் ஃபர்ஸ்ட் சோலார் ஆகிய மேலும் 4 நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பிரதமர் பேச உள்ளார். பிரதமரின் இந்த சந்திப்புகள் மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து 30 ஆயுதம் தாங்கிய பிரிடேட்டர் ரக ட்ரோன்களை இந்தியா வாங்க இருக்கும் நிலையில் அதனை தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவன தலைவரை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த ட்ரோன் 50,000 அடி உயரத்தில், தொடர்ந்து 27 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டதாகும், இந்த ட்ரோன்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் சூரியசக்தி கலன்களை உற்பத்தி செய்யும் பர்ஸ்ட் சோலார் நிறுவனங்களின் பங்களிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என கருதப்படுகிறது.

Also Read:  ‘250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட்’ – சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர்கள்

5 நிறுவன தலைவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனையும் பிரதமர் இன்று சந்தித்து பேச உள்ளார். இதனையடுத்து நாளை அமெரிக்க பிரதமர் ஜோ பைடனை பிரதமர் சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: