முகப்பு /செய்தி /இந்தியா / “கடன் சுமையில் வளரும் நாடுகள்.. உலகளாவிய நிர்வாகம் தோல்வி..” - ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு..!

“கடன் சுமையில் வளரும் நாடுகள்.. உலகளாவிய நிர்வாகம் தோல்வி..” - ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உலகளவில் பன்முகத்தன்மை இன்று நெருக்கடியில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், தொற்று நோய், பயங்கரவாதம் மற்றும் போர் போன்றவற்றால் உலகளாவிய நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டதாக கூறினார்.

இதையும் படிங்க; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன் 

பல வளர்ந்த நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கும் போது, தாங்கமுடியாத கடன்களால் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகை பிளவுபடுத்தும் பிரச்னைகளில் பொதுநிலையை கண்டறிய உலகத் தலைவர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஒருபுறம் வளர்ச்சி மற்றும் செயல்திறன் மற்றும் மறுபுறம் பின்னடைவு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைக் கண்டறிவதில் ஜி 20 முக்கிய பங்கு வகிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், சீன, ரஷ்யா உள்ளிட்ட ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஜி20 அமைப்பில் இல்லாத நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சீனா வெளியுறவு அமைச்சர் கின் கேங் (Qin Gang) உள்ளிட்ட தலைவர்களை ஜெய்சங்கர் வரவேற்றார்.

First published:

Tags: G20 Summit, PM Modi