Home /News /national /

மருத்துவ கல்லூரிகளை அதிகரிக்க முன்வர வேண்டும்: பிரதமர் மோடி

மருத்துவ கல்லூரிகளை அதிகரிக்க முன்வர வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் சிறந்த கொள்கைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் எனவும், இதன் மூலம், உலகளவில் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களை இந்தியா உருவாக்க முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கச் சென்ற மாணவர்கள் போரால் சிக்கித் தவித்துவரும் நிலையில், இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளை அதிகரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

    பட்ஜெட்டுக்கு பிந்தைய விவாதத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறித்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுகாதாரத்துறை கட்டமைப்புகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், அதனால்தான் முந்தைய காலங்களைவிட சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    பெரிய நகரங்களை தாண்டி, கிராமங்களிலும் அத்தியாவசிய சுகாதார வசதிகள் கொண்டு வரப்படும் என்ற பிரதமர்,  அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார்.  நமது பிள்ளைகள் வேறு நாட்டு மொழி தெரியாத நிலையிலும் மருத்துவ படிப்புக்காக சிறிய நாடுகளுக்கு செல்வதாக ஆதங்கப்பட்ட பிரதமர் மோடி, மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பதற்கு தனியார் அமைப்புகள் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: உக்ரைன் விவகாரம்: அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே மதில்மேல் பூனையாக இந்தியா


    மேலும் மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் சிறந்த கொள்கைகளை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் எனவும், இதன் மூலம், உலகளவில் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களை இந்தியா உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். ஆயுஷ் மருத்துவம் உலக அளவில் அங்கீகாரம் பெற்று வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, முதன்முதலாக பாரம்பரிய மருத்துவத்துக்கான மையத்தை இந்தியாவில் தொடங்குவதை நினைத்து பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Medical colleges, Medical Students, PM Narendra Modi

    அடுத்த செய்தி