Home /News /national /

''பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிரசார இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும்'' : பிரதமர் மோடி

''பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிரசார இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும்'' : பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

நமது நகரங்கள்தான் நமது பொருளாதாரத்தின் உந்துசக்தி. நகரங்களை வலிமை வாய்ந்த பொருளாதார மையமாக நாம் மாற்ற வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிரச்சார இயக்கத்திற்கு மேயர்கள் புத்துயிர் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். காணொலி காட்சி வாயிலாக அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிரச்சார இயக்கத்திற்கு மேயர்கள் புத்துயிர் அளிக்க வேண்டும். கழிவுகளை பணமாக்குவதற்கான வழிகளை மேயர்கள் ஆராய வேண்டும். நமது நகரம் தூய்மையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதற்கு, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    தூய்மையைப் பராமரிப்பதில் நகரங்களுக்கு இடையே, ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும். நகரங்களை புதுப்பிக்கும் பணியுடன் தூய்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்வது அவசியம். அந்த வகையில், தங்களது நகரங்களில் உள்ள வார்டுகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.

    அதாவது சுதந்திரப் போராட்டம் குறித்த ரங்கோலி போட்டிகள், பாட்டுப் போட்டி மற்றும் வாய்ப்பாட்டுப் போட்டி, போன்ற நிகழ்ச்சிகளுக்கு மேயர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பேசியுள்ளேன். மேலும் நகரங்கள் உருவான தினங்களைக் கண்டறிந்து அவற்றைக் கொண்டாடலாம்.

    ஆறுகள் ஓடும் நகரங்களில், ஆற்றுத் திருவிழாக்களைக் கொண்டாடலாம். ஆறுகளின் பெருமையை பறைசாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. இதன் மூலம் மக்கள் ஆறுகளின் பெருமையை உணர்ந்து அவற்றை தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியத்தை அறிவார்கள்.

    அந்தந்த நகரங்களில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் வீடுகளில் எல்இடி மின்விளக்குகள் பெருமளவு பயன்படுத்தப்படுவதை மேயர்கள் உறுதி செய்ய வேண்டும். அந்தந்த நகரங்களில் உள்ள தேசிய மாணவர் படைப்பிரிவுகளை மேயர்கள் தொடர்பு கொண்டு தூய்மைப்படுத்தும் குழுக்களை அமைக்க வேண்டும்.

    பொதுப் போக்குவரத்து வசதிகளை மக்கள் பயன்படுத்துவதை மேயர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றும் திட்டத்தின்படி நகரங்களில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்வதற்கு உகந்த இடங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

    நமது நகரங்கள்தான் நமது பொருளாதாரத்தின் உந்துசக்தி. நகரங்களை வலிமை வாய்ந்த பொருளாதார மையமாக நாம் மாற்ற வேண்டும்.சாலையோர வியாபாரிகள் நமது பயணத்தின் ஒரு அங்கம். ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் இடையூறுகளைச் சந்திப்பதை நாம் காண்கிறோம். அவர்களுக்காக நாம் பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

    இதையும் படிங்க : இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

    உங்களது நகரங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளின் பட்டியலைத் தயாரித்து செல்போன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்து அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இது வங்கி நிதிச் சேவை பயன்பாட்டை மேம்பட்டதாக மாற்றும்.

    சர்தார் படேல் அகமதாபாத் மாநகர மேயராக இருந்தார். நாடு இன்றைக்கும் அவரை நினைவு கூர்கிறது. மேயர் பதவி என்பது அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கையின் முதல் படிக்கல். அதன் மூலம் நீங்கள் நாட்டு மக்களுக்கு பணியாற்றலாம்.
    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதையும் படிங்க :  3 மணி நேர தீவிர சிகிச்சை... ஒரே நபர் கிட்னியில் இருந்து 156 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை

    இதையும் படிங்க : பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து பெயரில் போலி கணக்கு: ப்ளூ டிக் வழங்கிய ட்விட்டர்
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி