Home /News /national /

நேதாஜியை பின்பற்றி நடந்திருந்தால் பாரதத்தின் பெருமை பன்மடங்கு உயர்ந்திருக்கும் - பிரதமர் மோடி

நேதாஜியை பின்பற்றி நடந்திருந்தால் பாரதத்தின் பெருமை பன்மடங்கு உயர்ந்திருக்கும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியா கேட் அருகே நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதையை நிறுவியுள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பாதையை பின்பற்றி நடந்திருந்தால் பாரதத்தின் பெருமை பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்றும் ஆனால் அவர் மறக்கப்பட்டார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமா், குடியரசுத் துணைத் தலைவா் இல்லங்கள், மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் 13,450 கோடி ரூபாய் செலவில் மத்திய நகா்புற வளா்ச்சித் துறை மேற்கொண்டது. இதில் ராஜ பாதையில் பொதுமக்களின் வசதிகளுக்காக சென்ட்ரல் விஸ்டா மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

    கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர், சென்ட்ரல் விஸ்டா வளாகத்தையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள 28 உயரமுடைய 280 டன் கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையையும் திறந்து வைத்தார்.

    இதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த 20 மாதங்களாக இந்த சென்ட்ரல் விஸ்டா வளாகத்தை அமைக்கும் பணிகளில் பங்குபெற்ற ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காலனித்துவத்தின் சின்னம் ராஜபாதை அழிக்கப்பட்டு கடமை பாதை வடிவத்தில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக கூறினார். காலனித்துவத்தின் மற்றொரு அடையாளத்திலிருந்து நாம் வெளியே வரும் தருணத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

    இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்த மோடி, பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ஆங்கிலேயர்களின் பிரதிநிதி ஒருவரின் சிலை அங்கு இருந்ததாக குறிப்பிட்டார். நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதையை நிறுவியுள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

     



    அகண்ட பாரதத்தின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் 1947-க்கு முன்பே அந்தமானுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து மூவண்ணக்கொடியை ஏற்றினார். சுதந்திரத்துக்குப் பின் நேதாஜியின் பாதையை பின்பற்றியிருந்தால் பாரதத்தின் மேன்மை பன்மடங்கு அதிகரித்து பெரும் உயரங்களைத் தொட்டிருக்கும். துரதிருஷ்டவசமாக அவர் மறக்கப்பட்டார்.

    Also Read: மக்களை ஒன்று சேர்க்கவே இந்த பாரத் ஜோடோ யாத்திரை - ராகுல் காந்தி

    பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடியதற்கேற்ப உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாரதத்தை பற்றி சிறந்த கவிதையை எழுதியுள்ளார் மகாகவி பாரதியார். ஒவ்வொரு இந்தியரையும் கர்வம் கொள்ள வைக்கும் வரிகள் அவை. அதன் பொருள் உலகிலேயே சிறந்த நாடு இந்தியா என்பதாகும்,சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவர் என்றும் பிரதமர் மோடி கூறினார் ,

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி