Home /News /national /

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்: பிட்காயின் குறித்து பதிவிட்ட ஹேக்கர்கள்

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்: பிட்காயின் குறித்து பதிவிட்ட ஹேக்கர்கள்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள், “இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது” என்ற பதிவை வெளியிட்டனர். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் , பிட்காயின் குறித்த பதிவு ஒன்றையும் வெளியிட்டனர். உடனடியாக அவரது கணக்கு மீட்கப்பட்டு, பதிவும் நீக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்குபவர், அரசின் திட்டங்கள், அரசு தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக தனது சமூக ஊடக பக்கத்தில் அவர்வெளியிட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு சார்ந்து ஒரு ட்விட்டர் கணக்கும், தனிப்பட்ட முறையில் ஒரு ட்விட்டர் கணக்கும் உள்ளன.

    அரசு சார்ந்த ட்விட்டர் கணக்கான PMO Indiaவை  45.4 மில்லியர் பேரும், தனிப்பட்ட கணக்கான Narendra modi கணக்கை 73.4 மில்லியன் பேரும் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்துள்ளனர்.

    மேலும் அதில் இருந்து, "இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி நாட்டின் அனைத்து மக்களும் வழங்கி வருகிறது” என்று பதிவிட்டு மோசடி லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். பிரதமரின் தனிப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டது பின்னரே தெரியவந்தது.



    உடனடியாக ஹேக் செய்யப்பட கணக்கு மீட்கப்பட்டு, அதில் இருந்து வெளியிடப்பட்ட பதிவும் டெலிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,  பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. ட்விட்டர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது.  இடைப்பட்ட நேரத்தில் அந்த கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட பதிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    Published by:Murugesh M
    First published:

    Tags: Narendra Modi, Prime Minister Narendra Modi

    அடுத்த செய்தி