ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா..!

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் வகையில் செயல்பட இதுவே நேரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஜி-20 அமைப்பு . ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

2023- ஆம் ஆண்டில் ஜி/20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த மாநாட்டில் ஜி-20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோஜோ விடோடோ வழங்கினார். இதனையடுத்து ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றது.

இதையும் படிங்க:  24 மணிநேரத்திற்கு இந்த சிம் கார்டுகள் இயங்காது - புதிய விதிகள் சொல்வது என்ன

 இந்த நிலையில் நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரமர் மோடி, உலகளாவிய நலனுக்காக தீர்க்கமான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பணியாற்ற விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் வகையில், மேலும் மேலும் முன்னேறி, அடிப்படை மனநிலை மாற்றத்தை ஊக்குவிக்க இதுவே சிறந்த நேரம் என்று உறுதியாக நம்புவதாகவும் பிரதமர் பதிவிட்டுள்ளார். ஒற்றுமையை ஆதரிக்கும் நமது ஆன்மீக மரபுகள் மூலம் உலகளாவிய சவால்களைத் தீர்க்க ஒன்றாகச் செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Delhi, G20 Summit, PM Modi